கண்ணதாசனுக்காக கமல் எழுதிய கவிதை!

இன்று கவிஞர் கண்ணதாசனின் நினைவு நாள் தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன், கண்ணதாசனுக்காக ஒரு கவிதையை எழுதி அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த கவிதை பின்வருமாறு:”

செப்பிடும் நற்றமிழை
செவிவழி எனக்கீந்த
செவிலித்தாய்
முத்தைய்ய மாமணி
பிந்தைய காலத்தில்
பாடவந்தோர் பற்றிய பாட்டை
பாட்டுடைத் தலைவன் எனினும்
கண்ணனுக்கு தாசன்
பிறந்து வந்து பாடியதால்
இறந்ததை மன்னித்து
இனியென்றும் இறவாதும்
புகழையும் தமிழையும்
போற்றிடும் தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *