யாருக்கு தெரியுமா?

நடிகை வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் இந்த திருமணம் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது

பீட்டர் பால் முதல் மனைவி எலிசபெத் ஆவேசமாக பேட்டி அளிக்க அதற்கு வனிதா பதிலடி கொடுத்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இன்று வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் என்னுடைய வாழ்க்கை வொர்க் ப்ரம் ஹோம் ஆக உள்ளது. ஆம் வீட்டில் லவ் வொர்க் நடக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

மேலும் கணவர் பீட்டர் பால் முன் அவர் தனது மடியில் படுத்து இருக்கும் மகளுக்கு முத்தம் கொடுக்கும் காட்சியும் இந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோவுக்கு பலர் லைக்ஸ்களை அள்ளி போட்டு வருகின்றனர்

இந்த நிலையில் ஒரு இன்ஸ்டாகிராம் பயனாளி வனிதா மகளிடம் ஒரு கேள்வியை கேட்டுள்ளார். உங்கள் திருமண வாழ்க்கை சிறக்க எனது வாழ்த்துக்கள் என்று சொல்றியே, உங்க அம்மா ஒருவேளை எலிசபெத் ஆக இருந்தால் இப்படித்தான் வாழ்த்து தெரிவிப்பிங்களா? என்று கேட்டுள்ளார்

இந்த கேள்விக்கு வனிதாவும் அவரது மகளும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

//www.instagram.com/p/CCQM4-vDMjG/?hl=en

Leave a Reply