கணவருடன் மீண்டும் இணைந்துவிட்டேன். மக்கள் என்னை ஆதரிப்பார்கள்: தீபா

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், அவருடைய கணவர் மாதவனும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து இருவரும் தனித்தனியே கட்சி ஆரம்பித்த நிலையில் நேற்றிரவு இருவரும் ஒன்றாக ஜெயலலிதா சமாதியில் மலர்வளையம் இணைந்தனர். இந்த இணைப்பு காரணமாக அவர்களுடைய இரண்டு கட்சிகளும் ஒன்றாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீபா கூறியதாவது: , “தமிழக சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்படி நடைபெறும் பட்சத்தில் அது நேர்மையாக நடைபெறுமா என்பது சந்தேகமே. பல்வேறு சூழ்ச்சி வளைகள் மத்தியில் நாங்கள் இருவரும் இணைந்துள்ளோம். தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சி பெரும்பான்மையை இழந்த ஆட்சியாக உள்ளது. எனவே, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்படி நடத்தும் பட்சத்தில் அது நேர்மையாக நடக்குமா என்பது கேள்விக்குறியே?.

தினகரன் தி.மு.கவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மக்கள் இந்த ஆட்சியை விரும்பவில்லை. எனவே, தமிழகத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் பொதுமக்கள் என்னை ஆதரிப்பார்கள். நீட் விவகாரத்தில் ஒரு மாணவியை இழந்தும் இன்னும் அதிலிருந்து விலக்கு பெற்று தர தமிழக அரசுக்குத் திராணி இல்லை’

இவ்வாறு தீபா கூறினார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *