கட்டணம் செலுத்தி உறுப்பினரை புதுப்பித்த கருணாநிதி

திமுக தலைவர் மு.கருணாநிதி தனது உறுப்பினர் பதவியை உரிய கட்டணம் செலுத்தி புதுப்பித்து கொண்டதாக திமுக சார்பில் வெளியான அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

திமுகவின் 15வது அமைப்பு தேர்தல் விரைவில் நடைபெறவிருப்பதை அடுத்து உறுப்பினர் பதவியை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் திமுக தலைவர் கருணாநிதி தனது உறுப்பினர் பதவியை அதற்குரிய கட்டணத்தை கட்டி புதுப்பித்து கொண்டார். உறுப்பினர் பதவி புதுப்பிக்கும் நிகழ்ச்சியில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *