shadow

கஜா புயல் பாதிப்பு: இன்று பள்ளிகள் விடுமுறை குறித்த தகவல்

கஜா புயல் பாதிப்பு மற்றும் மழை காரணமாக டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றும் ஒருசில இடங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதித்த பகுதிகளான நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், நாகை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராக் அறிவித்துள்ளார்.

Leave a Reply