shadow

கஜா புயல் நிதி வழங்கிய சிறுமிக்கு சைக்கிள் கொடுத்த முதல்வர்

தான் சிறுக சிறூக சேமித்து வைத்த சிறுசேமிப்பு பணத்தை கஜா புயல் நிவாரண நிதிக்காக வழங்கிய 5ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாராட்டு தெரிவித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சைக்கிளை பரிசாக வழங்கினார்.

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகள் அக்சயாஸ்ரீ, தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்றுவருவதற்காக, சைக்கிள் வாங்க அவர் சேமித்து வைத்த 520 ரூபாயை, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பிவைத்தார்.

இதையறிந்து, மாணவி அக்சயாஸ்ரீயை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாணவிக்கு புதிய மிதிவண்டி ஒன்றை பரிசாக வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *