கஜா புயல்: ஆந்திரத்திற்கு விடப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்

வங்கக்கடலில் உருவான கஜா புயலின் திசை வேறுபக்கம் நகர்வதால் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான கஜா என்ற புயல் வரும் 15-ஆம் தேதி கரையை கடக்கும் என்று கூறப்பட்ட நிலையில் அன்றைய தினம் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் கூறினர். இதுபோல் இந்த புயலால் ஆந்திரத்துக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் கஜா புயல் மேற்கு மற்றும் வடமேற்கில் நகர்ந்து வருவதால் ஆந்திரத்துக்கு வழங்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி கஜா புயல் நாகை மற்றும் பாம்பன் இடையே கரையை கடக்கும் என்றும், இந்த புயல் நிலப்பரப்பை வந்தடைவதற்குள் வலிவிழந்துவிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *