கச்சத்தீவு திருவிழா நாளை தொடக்கம்: அடையாள அட்டை வழங்கும் பணி ஆரம்பம்

ஒவ்வொரு வருடமும் கச்சத்தீவில் புனித அந்தோணியார் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். இந்திய, இலங்கை மீனவர்கள் இணைந்து கொண்டாடும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள இரு நாட்டு அரசுகளும் அடையாள அட்டை வழங்கும்

இந்த நிலையில் கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா நாளை தொடங்கி இரு தினங்கள் நடைபெற உள்ளது. இதனையடுத்து ராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல 2,451 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

நாளை மாலை 5 மணிக்கு அந்தோனியார் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி அடுத்த இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திருவிழாவை அடுத்து ராமேஸ்வரத்தில் இன்று முதல் வரும் 16-ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடைவிதுத்து மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவு பிறப்ப்பித்துள்ளனர். கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லவுள்ள படகுகள் சோதனை மற்றும் ஆவனங்கள் சரிபார்ப்பு பணிகளையொட்டி மீன்துறை அதிகாரிகள் நடவடிக்கை.

Leave a Reply