கசடதபற படத்தின் 6 ஒளிப்பதிவாளர்கள் பெயர்கள் அறிவிப்பு!

வெங்கட்பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வளர்ந்து வரும் ‘கசடதபற’ படத்தின் ஒளிப்பதிவாளர்களாக பாலசுப்பிரமணியம், விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, சக்தி சரவணன், எஸ்.ஆர்.கதிர் மற்றும் ஆர்.டி.ராஜசேகர் ஆகிய ஆறு ஒளிப்பதிவாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பைபிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

நேற்று இந்த படத்தின் எடிட்டர்களாக அந்தோணி, காசி விஸ்வநாதன், ராஜா முகமது, விவேக் ஹர்ஷன், ரூபன், பிரவீண் கே.எல் ஆகியோர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். மேலும் நாளை இசையமைப்பாளர் கங்கை அமரன் இந்த படத்தின் ஆறு இசையமைப்பாளர்கள் யார் யார் என்பதை அறிவிக்கவுள்ளார்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *