ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிக்கு இரட்டை இலை: டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த வழக்கின் தீர்ப்பு டெல்லி ஐகோர்ட்டில் சற்றுமுன் வெளியிடப்பட்டது இந்த தீர்ப்பின்படி இரட்டை இலை சின்னத்தை ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் அணிக்கு தேர்தல் ஆணையம் வழங்கியது சரியே என தீர்ப்பளித்தது டெல்லி உயர்நீதிமன்றம்! மேலும் தினகரன் – சசிகலா தரப்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் என்பது தற்போது உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் அதிம்கவுக்கு இரட்டை இலை சின்னம் உறுதியானதை அடுத்து தங்கள் தரப்புக்கு குக்கர் சின்னம் வழங்க வேண்டும் என்று : இரட்டை இலை சின்னம் வழக்கில் தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்ற அமர்வில் டி.டி.வி.தினகரன் தரப்பு முறையீடு செய்துள்ளது

இந்த முறையீட்டு மனுமீதான விசாரணை விரைவில் நடைபெறும் என தெரிகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *