Chennai Today News

ஓவியாவிடம் கேள்வி கேட்க வேண்டுமா? இதோ ஒரு அரிய வாய்ப்பு

ஓவியாவிடம் கேள்வி கேட்க வேண்டுமா? இதோ ஒரு அரிய வாய்ப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகத்தமிழர்களின் மனதில் இடம்பிடித்துவிட்ட ஓவியா தற்போது ‘காஞ்சனா 3’ உள்பட ஒருசில படங்கலில் பிசியாக நடித்து வருகிறார். மேலும் இரண்டு பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கவும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

இந்த நிலையில் டிசம்பர் 20ஆம் தேதி ரசிகர்களின் கேள்விகளுக்கு டுவிட்டரில் பதிலளிக்க உள்ளதாக ஓவியா அறிவித்துள்ளார். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு #AskOviyaSweetz என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக அவர் பதிலளிக்க உள்ளதாகவும், அந்த நேரத்தை ரசிகர்கள் மிஸ் செய்துவிட வேண்டாம் என்றும் ஓவியாவின் ரசிகர்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

ஓவியாவின் இந்த ஒரே ஒரு டுவிட்டுக்கு 16 ஆயிரம் லைக்ஸ்களும், 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ரீடுவீட்டுக்களும் கிடைத்துள்ளன. முன்னணி நடிகர்களின் டுவீட்டுகளுக்கு கூட இந்த அளவு வரவேற்பு கிடைத்திருக்குமா? என்பது கேள்விக்குறியே