ஓரினச்சேர்க்கையாளர் தீர்ப்பு: கமல் வரவேற்பு

நேற்று சுப்ரீம் கோர்ட் ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு ஒன்றை அளித்தது. இந்த தீர்ப்புக்கு வரவேற்பும் கண்டனமும் மாறி மாறி கிடைத்து வரும் நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது: ‘ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது’. அடிப்படை உரிமைகளை மதிக்கும் குடிமக்கள் சார்பாக, எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதேபோல் நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான நடிகை குஷ்பு இந்த தீர்ப்பு குறித்து கூறுகையில், வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு இது. அவர்களின் உரிமை அவர்களுக்கு கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

https://twitter.com/ikamalhaasan/status/1037706501404602369

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *