ஓபிஎஸ் உள்பட 11 பேர்களை தகுதிநீக்கம் செய்யும் வழக்கு: சபாநாயகருக்கு நோட்டீஸ்
அரசுக்கு எதிராக செயல்பட்ட தினகரன் ஆதரவாளர்கள் 18 பேர்களை தகுதிநீக்கம் செய்த சபாநாயகர், அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்பட 11 பேர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று திமுக கொறடா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில் இதுகுறித்து பதிலளிக்குமாறு சபாநாயகருக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை வரும்  12ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
இந்த வழக்கில் திமுக சார்பில் பிரபல வழக்கறிஞர் அம்ரேந்தர் சிங் சரண் என்பவர் வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *