ஓட்டலில் பெண்ணுடன் உணவு அருந்திய வாலிபர் கைது

சவுதி அரேபியா நாட்டில் ஓட்டல் ஒன்றில் பெண்ணுடன் உட்கார்ந்து உணவருந்தி அதை வீடியோவாக வெளியிட்ட இளைஞர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பெண்களுக்கு எதிராக சட்டங்கள் தளர்த்தப்பட்டு வருகின்‌றன என்பது தெரிந்ததே

இந்த நிலையில் எகிப்து இளைஞர் ஒருவர் உணவகத்தில் தன்னுடன் பணிபுரியும் சக பெண் பணியாளருடன் அமர்ந்து உணவு அருந்தினார். பின்னர் அதை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து, சட்டத்தை மீறி செயல்பட்டதாக அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *