ஒவ்வொரு முதியவரிடம் இருக்க வேண்டிய குணம் கருணாநிதியிடம் உள்ளது. எஸ்.வி.சேகர்

திமுக தலைவர் கருணாநிதியை நேற்று அவரது வீட்டில் பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு குறித்து பெருமிதத்துடன் எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் அவர், , ‘நேற்று இரவு 8.45 க்கு கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்தேன். அவரால் பேச இயலவில்லையானாலும் மலர்ந்த சிரிப்புடன் என்னைப்பார்த்தார். நீங்கள் விரைவில் குணமடைவீர்கள் என சொல்லி GET WELL SOON card ஐ கொடுத்தேன். கலைஞரின் மனோ தைரியம் Will power ஒவ்வொரு முதியவரிடம் இருக்க வேண்டிய குணம்’ என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே பிரதமர் நரேந்திரமோடி உள்பட ஒருசில பாஜக தலைவர்கள் கருணாநிதியை சந்தித்து வருவதும், அதிமுகவை கடந்த சில நாட்களாக கடுமையாக விமர்சனம் செய்து வருவதையும் பார்க்கும்போது வரும் தேர்தலில் கூட்டணி மாற்றம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *