ஒரே நேரத்தில் மூன்று மாஸ் நடிகர்கள்: சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட பிளான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ என்ற படத்தையும் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என தெரிகிறது

இந்த நிலையில் தலைவர் ரஜினி, தளபதி விஜய்யை அடுத்து தல அஜித்தின் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், முதல் முறையாக சன் பிக்சர்ஸ் மற்றும் அஜித் இணையும் இந்தப் படத்தை விஷ்ணுவர்தன் இயக்குவார் என்று கூறப்படுகிறது

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் மூன்று படங்களிலும் சேர்த்து மொத்தம் ரூ.1000 கோடிக்கும் மேல் சன் பிக்சர்ஸ் முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது என்பதும், ஒரே நேரத்தில் மூன்று மாஸ் நடிகர்களின் படங்களை தயாரிக்கும் நிறுவனம் என்ற பெருமை கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply