shadow

ஒரே நாளில் ‘டாக்டர்’ மற்றும் அயலான்’ ஆன சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டாக்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 11.03 மணிக்கு வெளியான நிலையில் சரியாக எட்டு மணி நேரம் கழித்து அதாவது இன்று இரவு 7 மணிக்கு அவர் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ’அயலான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சிவகார்த்திகேயன் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தான் நடித்து வரும் இரண்டு படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

டாக்டர் திரைப்படம் நெல்சன் இயக்கத்திலும், ’அயலான்’ படம் ரவிக்குமார் இயக்கத்திலும் உருவாகி வருகிறது என்பதும், இந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *