ஒரே நாளில் இரண்டு ரிலீஸ்: விஷால் ரசிகர்கள் குஷி!
#விஷால் தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கிய ஆக்சன் என்ற திரைப்படம் நாளை தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது
இந்த படத்திற்கு அபாரமான புரோமோஷன் செய்யப்பட்டுள்ளதால் இந்த படத்தின் ஓபனிங் வசூல் பிரமாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில் விஷாலின் ஆக்சன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் அவர் நடிக்க உள்ள 28வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஆனந்த் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் விஷால் தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நாளை காலை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
எனவே விஷாலின் ஆக்சன் படமும் அவர் நடிக்கவிருக்கும் 28வது படத்தின் பர்ஸ்ட் லுக்கும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.