ஒரே நாளில் இரண்டு இளம்பெண்கள் மீது தாக்குதல்! என்ன நடக்குது தமிழ்நாட்டில்?

நேற்று ஒரே நாளில் சென்னையில் ஒரு இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டும், திருச்சியில் ஒரு இளம்பெண்ணுக்கு கத்திக்குத்தும் நடந்துள்ளதால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் ரயிலுக்காக காத்திருந்தபோது திடீரென அவரை நோக்கி வந்த நபர் ஒருவர் அந்த இளம்பெண்ணை அரிவாளால் வெட்டியுள்ளார். இந்த நபர் ஈரோட்டைச் சேர்ந்த சுரேந்தர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. படுகாயம் அடைந்த இந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதேபோல் திருச்சி அண்டங்கொண்டான் பகுதியில் கல்லூரி மாணவி மலர்விழி என்பவரை அவருடைய உறவினர் ஒருவர் முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். கத்தியால் குத்திக்கொன்ற நபரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். போலீசார் அவரை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

ஒரே நாளில் இரண்டு இளம்பெண்கள் தாக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *