shadow

ஒரே நாடு ஒரே தேர்தல்: அதிமுகவை அடுத்து திமுகவும் எதிர்ப்பு

பாஜக திட்டங்களில் ஒன்று ஒரே நாடு ஒரே தேர்தல். வரும் 2019ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ளதை அடுத்து அதனுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலையும் நடத்த மத்தியில் ஆளும் பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கு நேற்று அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. அதிமுக அரசின் பதவிக்காலம் வரும் 2021 வரை இருப்பதால் இந்த திட்டத்திற்கு அக்கட்சி எதிர்ப்பு தெரிவித்தது

இந்த நிலையில் அதிமுகவை அடுத்து திமுகவும் இந்த திட்டத்தை எதிர்த்துள்ளது. இதுகுறித்து இன்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் திமுக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். மேலும் திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா நாளை மத்திய சட்ட ஆணையம் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு திமுக.வின் நிலையை விளக்க இருப்பதாக தெரிகிறது.

2015-ல் இதே திட்டத்தை ஆதரித்து நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அறிக்கை அளித்த அதிமுக , இப்போது தங்கள் ஆட்சியை முழுமையாக நிறைவு செய்வதற்காக அந்தத் திட்டத்தை எதிர்ப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. விரைவிலேயே தமிழகத்தில் தேர்தல் வரவேண்டும் என விரும்புகிற திமுக இதை ஏன் எதிர்க்க வேண்டும்? அப்படியானால் 2019 நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருவதை திமுக.வும் எதிர்க்கிறதா? இதில் திமுக.வுக்கு என்ன லாபம்? என பல கேள்விகள் எழுகின்றன.

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலை கொண்டு வரவேண்டும் என்பது புதிதாக கட்சி தொடங்கவிருக்கும் ரஜினிகாந்தின் விருப்பம்! மத்திய அரசு அதற்காகவே இந்த முயற்சியை எடுப்பதாக திமுக நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply