shadow

ஒரு வாரத்தில் எனது மகன் விடுதலையாகலாம்: அற்புதம்மாள்

ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்வது குறித்த முடிவை தமிழக அரசே எடுக்கலாம் என்றும் இதுகுறித்து தமிழக அரசு கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம் என்றும் நேற்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ள நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை பிரகாசமாகியுள்ளது

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள இந்த உத்தரவுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். இனி தமிழக முதல்வர், சட்டத்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க உள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் தமது‌ மகனின் விடுதலை சாத்தியமாகுமென நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் ஏழு பேரை விடுவிப்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நல்ல முடிவை விரைவில் எடுப்பார் என்றும் அமைச்சர் மாபா.பாண்டியராஜன் அவர்களும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply