ஒரு வருடம் கழித்து மீண்டும் ரிலீஸ் ஆகும் துருவ் விக்ரம் படத்தின் டீசர்!

துருவ் விக்ரம் நடிப்பில் பாலா இயக்கிய ‘வர்மா’ திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியாகி 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்ற நிலையில் தற்போது அதே படம் ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் டீசர் வரும் 16ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான ‘வர்மா’ பட டீசருக்கும் தற்போது வெளியாகவுள்ள ‘ஆதித்யவர்மா’ பட டீசருக்கும் உள்ள வித்தியாசங்களை பார்வையாளர்கள் உணர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கிரிசய்யா இயக்கி வரும் இந்த படத்தில் துருவ் விக்ரம், பனிதா சாந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் ஆகிய பலர் நடித்து வருகின்றனர். ஈ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ராதன் இசை அமைத்து வருகிறார்.

Leave a Reply