ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தில் எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வேண்டுமா?


பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள ரிசர்ச் பெல்லோஷிப் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். CRPD/PDRF/2018-19/04

பணி: Research Fellowship

காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.1,00.000

வயதுவரம்பு: 28 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Banking, Finance, IT, Economics போன்ற துறைகளில் முனைவர் பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு விமான கட்டணம் வழங்கப்படும். நேர்முகத் தேர்வின் போது தேவையான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை இணைத்து சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.sbi.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் அட்டெஸ் செய்யப்பட்ட நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
State Bank of India, Central Recruitment & Promotion Department, Corporate Centre, 3rd Floor, Atlanta Building, Nariman Point, Mumbai – 400 021.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2018

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 07.08.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.sbi.co.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *