ஒரு ரூபாய் இட்லி: ஆட்டுக்கல் சட்னி: அசத்தும் உணவகம்

பசி என்று ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றால் பர்ஸில் உள்ள பாதி பணம் காலியாகி விடும் அளவுக்கு ஹோட்டலில் உள்ள விலைப்பட்டியல் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே

இந்நிலையில் விலைவாசி விண்ணை முட்டிய இந்த காலத்தில் ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு ஜெயங்கொண்டத்தில் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நடத்தும் உணவகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

மூன்று தலைமுறைகளாக நடத்தி வரும் இந்த உணவகத்தில் ஆரம்ப காலத்தில் வெறும் 3 பைசாவுக்கு இட்லி விற்பனை செய்யப்பட்டதாம். அதன்பின் படிப்படியாக விலைவாசி உயர்வை அடுத்து தற்போது ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகின்றனர்

இந்த கிராமத்தில் உள்ள ஏழை எளிய மக்கள், மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் அனைவரும் இந்த ஹோட்டலில் இட்லி வாங்கி சாப்பிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இட்லி மட்டும் இந்த ஓட்டலில் மூன்று ரூபாய்க்கு தேநீர் விற்கப்படுகிறது இட்லிக்கு ஆட்டுக்கல்லில் அரைத்த சட்னி வழங்கப்படுவதால் சுவையும் அதிகம் விலையும் குறைவு என்ற என்ற வசதி இந்த ஓட்டலில் உள்ளது

இந்த ஹோட்டலை நடத்தி வரும் ராஜீவ்காந்தி குடும்பத்தினருக்கு அந்த பகுதி மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இட்லி, சட்னி, ஒரு ரூபாய், ராஜீவ் காந்தி

Leave a Reply