shadow

அப்படி என்ன இருக்கு அந்த மாஸ்க்கில்?

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவித்து வருகிறது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்களுடைய பண வசதிக்கேற்ப பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலான மாஸ்க்கை அணிந்து வருகின்றனர்

இந்த நிலையில் புனேவில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள மாஸ்க் அணிந்து தெருவில் வலம் வந்துகொண்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

தங்கத்தினால் செய்யப்பட்ட இந்த மாஸ்க்கில் சுவாசத்திற்காக சின்ன சின்ன துளைகள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாஸ்க்கை அவர் அணிந்து வலம் வந்து கொண்டிருந்தாலும்,ம் இந்த மாஸ்க் கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாக்கும் தன்மை உடையவை அல்ல என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்

அந்த தொழிலதிபருக்கு நகை மீது ஆசை இருக்கலாம் ஆனால் அதற்காக உயிருடன் விளையாட வேண்டாம் என்றும் நல்ல தரமான மருத்துவம் மாஸ்க்கை அவர் அணிய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவர்களின் அறிவுறுத்தலை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *