shadow

ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு

மத்திய அரசு வரும் 2019 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையம் சட்டப்படி இது சாத்தியமில்லை என்று கூறி வருகிறது.

இந்த நிலையில், ஒரு நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அ.தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சட்ட ஆணையத்திற்கு கடந்த மாதம் 29-ம் தேதி கடிதம் எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில் தற்போதைய சட்டமன்றத்தின் ஆயுள் காலத்தை குறைக்கும் வகையில் எந்த மாற்றமும் கொண்டு வரக்கூடாது என கூறப்பட்டுள்ளது

2021 வரை தமிழக சட்டமன்றத்தின் காலம் இருப்பதால் அதற்கு முன்பே தேர்தலை சந்திக்க அதிமுக விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக டெல்லியில் நாளை சட்ட ஆணைய கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழக அரசின் சார்பில் துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்க உள்ளனர்.

Leave a Reply