ஒரு தினகரனையே இவர்களால் சமாளிக்க முடியவில்லை: ஜெயகுமாருக்கு தினகரன் பதிலடி

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்ளிடம் பெசினார்.

அப்போது “பத்தாயிரம் தினகரன்கள் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது” என்று ஜெயக்குமார் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்து பேசிய தினகரன், “ஜெயக்குமார் இன்று ஒன்று பேசுவார். நாளை ஒன்று பேசுவார்.

எப்போதுமே உண்மைக்கு புறம்பானதை மட்டுமே பேசுவார். என்னை பார்த்து காளான் என்று சொல்கிறார். அப்படியென்றால் நான் ஆலமரமாக வளர்ந்து கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம்.

ஒரு தினகரனையே இவர்களால் சமாளிக்க முடியவில்லை. எப்படி ஆயிரம் தினகரன்களை சமாளிப்பார்கள்?” என்று கூறினார்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *