shadow

தக்காளி விலை கிலோ ஒரு ரூபாய்க்கு மட்டுமே விலை போனதால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் தக்காளியை டிராக்டரை ஏற்றி அழித்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களாக தக்காளி விலை குறைந்து கொண்டே போகும் போனதால் விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் பீகார் மாநில காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு மட்டுமே தக்காளி விற்பனையானது. இதனால் போக்குவரத்து செலவுக்கு கூட கட்டுபடி ஆகாது என்பதால் தக்காளியை சாலையில் போட்டு டிராக்டரை ஏற்றி அழித்தனர். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது