ஒரு கிராம் 4,000 ரூபாயை நெருங்கிய தங்கத்தின் விலை: பொதுமக்களின் மகிழ்ச்சியும் வருத்தமும்!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் சென்னையில் இன்று தங்கத்தின் விலை ரூபாய் சவரன் ஒன்றுக்கு 216 ரூபாய் அதிகரித்து ஒரு கிராமம் ரூபாய் 4,000 ரூபாயை நெருங்கி உள்ளது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் மகிழ்ச்சியும் புதிதாக தங்கம் வாங்க இருப்பவர்கள் அதிர்ச்சியும் அடைத்துள்ளனர்

ஏற்கனவே ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 31 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. தங்கத்தின் விலை நேற்று சவரன் ஒன்றுக்கு 31 ஆயிரத்து 408 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 216 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 624 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 1 ரூபாய் உயர்ந்து, 51 ரூபாய் 60 காசுகளுக்கும், பார் வெள்ளி ஒரு கிலோ 1000 ரூபாய் உயர்ந்து 51 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 4 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளதால் நடுத்தர மக்கள் கவலையடைந்துள்ளனர்.

Leave a Reply