ஒரு ஓவரில் 9 ரன்கள் அடிக்க தவறிய வங்கதேசம்: ரஷித்கானின் அசத்தல்

வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மூன்று டி-20 தொடர் நடைபெற்றது. ஏற்கனவே இரண்டு டி-20 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் இன்று 3வது டி-20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 145 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்து ஒரு ரன்னில் தோல்வி அடைந்தது.

கடைசி ஓவரில் வங்கதேச அணியின் வெற்றிக்கு தேவை 9 ரன்கள் தேவை என்ற நிலையில் ரஷித்கான் பந்துவீச்சில் அந்த அணி 7 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ரஷித் கான் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் நாயகனாக ரஷித் கான் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *