shadow

ஒன் மேன் ஆர்மி’யாக செயல்படுகிறார் டிடிவி தினகரன்: தங்க தமிழ்ச்செல்வன்

‘ஒன் மேன் ஆர்மி’யாக டிடிவி தினகரன் செயல்படுவதால் கட்சியில் உள்ளவர்கள் வெளியேறி வருவதாகவும், மீதம் உள்ளவர்களும் விரைவில் வெளியேறுவார்கள் என்றும் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

எந்த கட்சியிலும் சேர நான் விரும்பவில்லை என்றும் எந்த கட்சியில் இருந்தும் யாரும் என்னிடம் பேசவும் இல்லை என்றும் கூறிய தங்க தமிழ்ச்செல்வன் சம்பளம் கொடுத்து கட்சியில் வேலை வாங்குகிறார்களா என்ன..? ஏன் பெட்டிப்பாம்பாக அடங்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினார்

மேலும் அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது என்றும், தங்க தமிழ்ச்செல்வன் தனது பேட்டியில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *