shadow

ஒகி புயலில் கோரத்தாண்டவம்: 100க்கும் மேற்பட்ட கேரள மீனவர்கள் மாயம்

வங்கக்கடலில் உருவான ஓகி புயல் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் உள்பட தென்மாவட்டங்களை துவம்சம் செய்த நிலையில் இன்று கேரளாவை அதிரடியாக தாக்கியுள்ளது. இந்த நிலையில் கேரள கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 150 பேர்களை காணவில்லை என்றும் மீட்புப்படை மற்றும் கடலோர காவல்படையினர்களால் 42 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் மீதி பேர்களை தேடும் பணி மும்முரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மீனவர்களை தேடிகண்டுபிடிக்க இந்திய கடற்படைக்கு சொந்தமான 4படகுகள் விரைந்துள்ளதாகவும், 2 ஹெலிகாப்டர்கள் உதவியுடனும் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒகி புயலின் தாக்கத்தால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து விழுந்துள்ளதால் அதனை சீர்செய்யும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றது.

Leave a Reply