shadow

ஐஸ்வர்யாவுக்கு ஓட்டு போட சொன்னாரா ஓவியா?

பிக்பாஸ் 2 போட்டியாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யா, ஓவியாவை காப்பியடித்து நடந்து கொள்வதாக சக போட்டியாளர்களே குறை கூறிக்கொண்டிருக்கும் நிலையில் ஓவியா தனது டுவிட்டரில் ஐஸ்வர்யா குறித்து ஒரு பதிவை பதிவு செய்துள்ளார்.

ஓவியா தனது டுவிட்டில் ‘ஐஸ்வர்யா தத்தா’ என்ற அவருடைய பெயரை மட்டும் பதிவு செய்துள்ளார்.

இந்த பெயரை வைத்து அவருடைய ஆர்மியினர்களும், ரசிகர்களும் பல்வேறு கருத்துக்களை கற்பனையில் கூறி வருகின்றனர். ஐஸ்வர்யாவுக்கு ஓட்டு அவரை காப்பாற்ற சொன்னதாக சிலரும், ஐஸ்வர்யாவை வெளியேற்றும்படி ஓவியா சொன்னதாக சிலரும் கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply