ஐபோன் x வெளியான 2வது நாளே மும்பைக்கு கடத்தல்: 11 ஐபோன் பிடிபட்டது

உலகம் முழுவதும் ஐபோன் என்றால் மக்களுக்கு ஒரு போதைதான். ஒரு ஐபோனை கையில் வைத்திருந்தாலே கெளரவம் என்று நினைக்கும் காலத்தில் தற்போது இருக்கின்றோம்

இந்த நிலையில் கடந்த 3ஆம் தேதி உலகம் முழுவதும் ஐபோன் x வெளியாகி வாடிக்கையாளர்களை குளிர்ச்சி அடைய செய்தது. இந்த போனை வாங்க வெளிநாடுகளில் இரவு முழுவதும் ஐபோன் ஸ்டோர் முன் வரிசையில் காத்திருந்த சம்பவங்களும் பல நாடுகளில் நடந்துள்ளது.

இந்த நிலையில் ஐபோன் x வெளியாகி இரண்டாவது நாளே ஹாங்காங் விமான நிலையத்தில் இருந்து மர்ம நபர் ஒருவர் 11 ஐபோன் x போன்களை மும்பையில் கடத்தி வந்துள்ளார். இதுகுறித்து ரகசிய தகவல் அறிந்த போலீசார் அந்த நபரை பிடித்து ஐபோன்களை பறிமுதல் செய்ததோடு, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *