ஐநா சபை முன்னாள் பொதுச்செயலாளர் கோபிஅன்னன் காலமானார்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 80. கோபி அன்னன் மறைவிற்கு பிரதமர் மோடி உள்பட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கோபி அன்னன் கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு பத்து ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக சேவை செய்தார். இவரது அர்ப்பணிப்பு சேவையை பாராட்டி கடந்த 2001ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அமெரிக்காவுக்கு அடிபணியாமல் பத்து ஆண்டுகளாக ஐநா சபையின் செயலாளராக பல அதிரடி முடிவுகளை எடுத்தவர் கோபி அன்னன் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *