shadow

ஏ.டி.எம்-இல் எழுதப்பட்ட நோட்டு வந்தால் என்ன செய்ய வேண்டும்?

தற்போது ரூ.2000 நோட்டில் எழுதப்பட்டிருந்தால் செல்லாது என்று வங்கி ஊழியர்களே வாங்க மறுக்கும் அனுபவம் பலருக்கு நேர்ந்திருக்கும். ஒருவேளை ஏடிஎம். இல் இருந்து எடுக்கப்பட்ட ரூ.2000 நோட்டில் எழுதப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

ஏ.டி.எம்-இல் பணத்தை எடுத்தவுடன் அந்த பணத்தில் ஏதாவது எழுதப்பட்டிருக்கின்றதா என்று சோதனை செய்யவும். ஏதாவது எழுதப்பட்டிருந்தால் ஏ.டி.எம்-இல் உள்ள காமிராவில் அதை நன்றாக காண்பித்து விட்டு அதன்பின்னர் வங்கி கேஷியரிடம் சென்று அந்த நோட்டை மாற்றிகொள்ளலாம்

கேமிராவில் காண்பிக்கவில்லை என்றால் அந்த நோட்டு ஏடிஎம்ல் இருந்துதான் எடுக்கப்பட்டது என்பதை வங்கி கேஷியர் நம்ப மறுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply