ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலும் விஜய்க்கு இரண்டு வேடங்களா?

இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் பாஜக தலைவர்களின் உதவியால் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ளது. இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த படத்தில் சோனாக்ஷி சின்ஹா அல்லது ராகுல் ப்ரித்திசிங் ஜோடியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திலும் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே முருகதாஸ் இயக்கிய ‘கத்தி’ படத்தில் இரண்டு வேடங்களில் நடித்த விஜய், இந்த படத்திலும் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘மெர்சல்’ படத்தில் ஜிஎஸ்டி குறித்த வசனங்கள் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து ‘தளபதி 62’ படத்திலும் அதிரடி அரசியல் வசனங்கள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *