எஸ்.ஜே.சூர்யா நடித்த முதல் ‘யூ’ சர்டிபிகேட் படம்

எஸ்.ஜே.சூர்யா படம் என்றாலே இரட்டை அர்த்த வசனங்கள், கிளாமர் காட்சிகள் அதிகம் இருக்கும் என்பதால் அவரது படங்கள் யூஏ அல்லது ஏ சான்றிதழ் தான் கிடைக்கும்

இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா நடித்த ‘மான்ஸ்டர்’ திரைப்படம் ‘யூ’ சான்றிதழ் பெற்றுள்ளது. இதனை காமெடியாக இன்று நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தெரிவித்த எஸ்.ஜே.சூர்யா, ‘நான் நடித்த முதல் யூ சர்டிபிகேட் படம் இதுதான்’ என்று கூறியுள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானிசங்கர், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் கோகுல் பினாய் ஒளிப்பதிவில் சபு ஜோசப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

Leave a Reply