Chennai Today News

எல்லோரும் சாப்பிட்டுவிட்டு வாங்க: தொண்டர்களுக்கு கனிமொழி கோரிக்கை

எல்லோரும் சாப்பிட்டுவிட்டு வாங்க: தொண்டர்களுக்கு கனிமொழி கோரிக்கை

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் தொண்டர்கள் தங்கள் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு வரவும் என்றும் திமுக தொண்டர்களுக்கு கனிமொழி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

சற்றுமுன் காவேரி மருத்துவமனைக்கு மீண்டும் வந்த திமுக எம்பி கனிமொழி, ‘திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருப்பதாகவும், விடிய விடிய காத்திருக்கும் தொண்டர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு வாருங்கள் என்றும் தொண்டர்கள் முன் பேசினார்.

இந்த நிலையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை வெளியே காத்திருக்கும் தொண்டர்களுக்கு இலவச உணவுகளை சமுகநல ஆர்வலர்களும் திமுக பிரமுகர்களும் வழங்கி வருகின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!