shadow

எல்லையில் ரத்த ஆறு ஓடும்: இம்ரான்கான் முன் பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி

பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான்கான் பதவியேற்ற பின்னர் இந்தியா பாகிஸ்தான் உறவில் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் இம்ரான்கான் முன் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆவேசமாக பேசிய பேச்சு அண்டை நாடுகளுக்கு அதிருப்தியை அளித்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வா பேசியபோது, ‘எல்லையில் எங்கள் நாடு மீது தீய கண்ணோட்டத்துடன் தாக்குதல் நடத்துவோருக்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். பழிக்கு பழி வாங்கி எல்லையில் ரத்த ஆறு ஓட வைப்போம். எங்களை பலவீனப்படுத்தி சில பிளவை ஏற்படுத்த நினைக்கிறார்கள். அவர்களுக்கு இடம் அளிக்காமல் ஒன்றுபட்டிருக்கும் பாகிஸ்தான் மக்களுக்கு தலை வணங்குகிறேன்’ என்று கூறினார்.

ஆனால் இதே கூட்டத்தில் பேசிய பிரதமர் இம்ரான்கான், ‘எதிர்காலத்தில் பாகிஸ்தான் எந்த நாட்டுடனும் போர் புரியாது. நாட்டின் வெளியுறவுக் கொள்கை நாட்டின் நலன் சார்ந்ததாகவே இருக்கும். பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம் போல் வேறு எந்த நாடும் போரிட்டது இல்லை ‘என்று கூறினார்

Leave a Reply