எய்ம்ஸ் மருத்துவப் படிப்புக்கான முழு விபரங்கள் இதோ:

எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்ப பதிவு இன்று தொடங்கி உள்ளது.

எய்ம்ஸ் மருத்துவக்கல்லூாி, மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிபதற்கான நுழைவுத்தேர்வு 2019ம் ஆண்டு மே மாதம் 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு விண்ணப்ப பதிவானது இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது. முதல் நிலை மற்றும் இறுதி நிலை என்று நடைபெறுகிறது.

முதல் நிலை விண்ணப்ப பதிவு இன்று தொடங்கி டிசம்பர் 12ம் தேதி வரை நடைபெறும். அதன் தகவல்கள் ஜனவரி 3 (2019) தேதி அறிவிக்கப்படும். விண்ண பதிவின் இறுதிநிலை விவரங்கள் ஜனவரி 4ம் தேதி தெரியவரும்.நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்மே 14 (2019) ஆம் தேதி வெளியாகும். தேர்வின் முடிவானதுஜூன் 12 ஆம் தேதி வெளியிடப்படும்.

முதல்கட்ட கலந்தாய்வு 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வாரத்திலும், இரண்டாம் கட்ட கலந்தாய்வுஆகஸ்டு மாதம்முதல் வாரத்திலும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு செம்டம்பர் மாதம் 4 ஆம் வாரத்திலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *