shadow

எமதர்மராஜனை அறிமுகம் செய்த அனிருத்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே செய்தி வெளிவந்த நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆம் ‘தர்மபிரபு’ என்ற படத்தில் யோகிபாபு ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை நேற்று இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டார்.

இந்த படத்தை முத்துகுமரன் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ‘விமல், வரலட்சுமி நடித்த ‘கன்னிராசி’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவில் ஷான் லோகேஷ் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை ரங்கநாதன் என்பவர் தயாரிக்கவுள்ளார்.

இந்த படத்தில் எமதர்மராஜன் கேரக்டரில் யோகிபாபு நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தில் அவருக்கு ஜோடி கிடையாது என்பதும் இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply