எப்போ சாகப்போறீங்க! கிண்டலாக கேட்ட நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சாமியார் வைரக்யானந்த்


மத்திய பிரதேசம், போபால் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜயசிங் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் பிரபல பெண் சாமியார் பிரக்யா தாக்குர் போட்டியிட்டார். பிரக்யா தாக்குரை பிடிக்காதவர்களில் ஒருவர் சாமியார் வைரக்யானந்த். எனவே இவர் திக் விஜய சிங் வெற்றி பெறுவார் என்றும், அவரது வெற்றியை யாகம் வளர்த்து பூஜை செய்து கொண்டாடுவேன் என்றும், ஒருவேளை அவர் தோற்றால் அந்த யாகத்தில் குதித்து சமாதியாகி விடுவேன் என்று சவால் விடுத்தார்.

தேர்தல் முடிவில் திக் விஜய்சிங் தோல்வி அடைந்து பிரக்யா தாக்குர் வெற்றி பெற்றார். உடனே நெட்டிசன்கள் சிலர் ‘சாமி எப்போ சாகப்போறீங்க’ என்று சாமியார் வைரக்யானந்தை இணையத்தில் கிண்டலடித்து வந்தனர்.

இந்த நிலையில் இதனால் மனம் உடைந்த சாமியார், மாவட்ட கலெக்டரிடம் தனக்கு சமாதி ஆக அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார். இதனால் இப்போது சாமியாருக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *