என் மகன் அன்புள்ளம் கொண்டவன்: பின்லேடனின் தாயார்

அமெரிக்க படையினர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்லேடனின் தாயார், தனது மகன் குறித்து கூறுகையில் தனது மகன் மூளைச்சலவையால்தான் தீவிரவாதி ஆனதாகவும், உண்மையில் தனது மகள் அன்புள்ளம் கொண்ட நல்லவன் என்றும் கூறியுள்ளார்.

தனது மகன் பின்லேடன் குறித்து பேட்டியளித்த அவரது தாயார் அலியா கூறியதாவது: எனது மகன் (பின்லேடன்) மிகவும் நல்லவன். மாணவ பருவத்தின் போது அவன் மூளைசலவை செய்யப்பட்டான். சவுதி அரேபியாவில் பல்கலைக் கழகத்தில் படித்தபோது கலாசார குழு ஒன்றுடன் அவனுக்கு தொடர்பு ஏற்பட்டது. எனவே அந்த குழுவிடம் இருந்து விலகி இருக்குமாறு அவனிடம் தொடர்ந்து வலியுறுத்தினேன். இருந்தும் அவன் வித்தியாசமான மனிதனாக ஒரு பயங்கரவாதியாக மாறினான்.

அவன் என்ன செய்கிறான் என்பதை என்னிடம் ஒருபோதும் தெரிவித்ததில்லை. ஏனெனில் என்னை மிகவும் நேசித்தான்’

இவ்வாறு பின்லேடன் தாயார் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *