என்.ஜி.கே ரிலீஸ் தேதி: சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி
சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய வந்த ‘என்.ஜி.கே. திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ‘என்.ஜி.கே.’ திரைப்படம் வரும் மே மாதம் 31ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுளது. இதனால் சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
என்.ஜி.கே. ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். பரபரப்பான அரசியல் படமான ‘என்.ஜி.கே தேர்தல் முடிந்தவுடன் வெளியாவது ஏமாற்றத்தை தருவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
#NGKfromMay31 worldwide✌🏼
— SR Prabhu (@prabhu_sr) March 25, 2019
Leave a Reply
You must be logged in to post a comment.