என்.ஜி.கே படத்திற்கு எப்படி ‘யூ’ கிடைத்தது?

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய ‘என்.ஜி.கே’ திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தில் அரசியல் வசனங்கள், அடிதடி, வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்திற்கு எப்படி யூ சான்றிதழ் கிடைத்தது என்று கோலிவுட்டில் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, தேவராஜ், உமா பத்மநாபன், இளவரசு, பொன்வண்னன், பாலாசிங், தலைவாசல் விஜய், வேலராமமூர்த்தி, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில் பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது

Leave a Reply