என்.ஜி.கே. சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்
சூர்யா நடித்த என்.ஜி.கே. திரைப்படம் வரும் 31ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படம் இன்று சென்சாருக்கு சென்றது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 28 நிமிடங்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் சென்சார் அதிகாரிகள் ஒருசில வசனங்களை மியூட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது
சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, தேவராஜ், உமா பத்மநாபன், இளவரசு, பொன்வண்னன், பாலாசிங், தலைவாசல் விஜய், வேலராமமூர்த்தி, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில் பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.