என்.ஆர்.சி. விவகாரத்தில் மம்தா இரட்டை வேடமா?

அசாமில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச நாட்டினர்களை அடையாளம் காண என்.ஆர்.சி. எனப்படும் குடிமக்கள் பதிவேடு வரைவு பட்டியல் சமீபத்தில் வெளீயானது. இந்த பட்டியலில் சுமார் 40 லட்சம் பேர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இதனை கண்டித்து மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்தார்.

ஆனால் இதே மம்தா பானர்ஜிதான் கடந்த 2008ஆம் ஆண்டு முன்னர் மேற்குவங்கத்தில் சட்டவிரோத குடியேற்ற விவகாரத்தில் நேர்மாறான கருத்தைத் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கடந்த 2005-ம் ஆண்டு லோக்சபா எம்.பி., யாக இருந்த மம்தா பானர்ஜி பாராளுமன்ரத்தில் ஒத்தி வைப்பு தீர்மானம் ஒன்ரை கொண்டு வந்தார். அதில் மேற்குவங்கத்திற்குள் வங்கதேசத்தவர்களின் சட்டவிரோத ஊடுருவல்கள் பேரிடராக மாறியிருக்கிறது. இந்தியர்கள் மற்றும் வங்கதேசத்தவர்களின் வாக்காளர் பட்டியல் என்னிடம் உள்ளது. எனது தீர்மானத்தின் மீதான விவாதம் எப்போது எடுத்துக் கொள்ளப்படும் என கேள்வியெழுப்பினார். தீர்மானம் விவாத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாததால், ஆத்திரமடைந்த மம்தா கையில் வைத்திருந்த தீர்மான நகல்களை துணை சபாநாயகர் சரண்ஜித் சிங் அத்வாலே மீது வீசி ஏறிந்து விட்டு அங்கேயே தமது ராஜினாமா கடித்தை வழங்கினார்.

தீர்மான நகல்களை மம்தா வீசியெறிந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதன் மூலம் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு அப்போது எதிராக இருந்த மம்தா இப்போது ஆதரவாக கருத்து தெரிவித்து நேர்மாறாக பேசுவது 2019-ம் பொதுத்தேர்தலில் ஓட்டு வங்கிக்காகவும், பிரதமர் நாற்காலியை குறி வைத்து தான் என மம்தா பானர்ஜி மீது காங். உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *