shadow

’என் அப்பா சூப்பர் ஸ்டார்’: நிவேதா தாமஸ் டுவீட்டுக்கு கமல் ரசிகர்கள் கிண்டல்

ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் கடந்த 9ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது வெற்றி நடை போட்டு வருகிறது. ஒரு சிலர் வேண்டுமென்றே இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை தந்த போதிலும் பெருவாரியான பாசிட்டிவ் ரிசல்ட் காரணமாக இந்த படம் வசூலில் சாதனை புரிந்து வருகிறது

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடித்த நிவேதா தாமஸ் தனது டுவிட்டரில் ’தர்பார். உங்கள் ஆதித்யா அருணாச்சலம், நம்ம தலைவர், என் அப்பா, அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார், ரஜினிகாந்த் சார், ஐ லவ் யூ’ என்று பதிவு செய்துள்ளார்

நிவேதா தாமஸ்ஸின் இந்த பதிவிற்கு ரஜினி ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த போதிலும் கமல் ரசிகர்கள் சிலர் நிவேதா தாமஸ்ஸை கிண்டல் செய்துள்ளனர். பாபநாசம் படத்தில் நீ செய்த கொலைக்காக கமலஹாசன் கஷ்டப்பட்டு உன்னைக் காப்பாற்றிய நிலையில் ’என் அப்பா சூப்பர் ஸ்டார் என்று ரஜினியை சொல்கிறாயா’ என்று தெரிவித்து வருகின்றனர். இந்த காமெடியான கிண்டல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *