என்னைவிட வேகமா முன்னேறுபவர் சிவகார்த்திகேயன்: விஜய்சேதுபதி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் பெரிய அளவில் நெருக்கமில்லாமல் இருந்தாலும் ஒருவரை ஒருவர் புகழ்வதில் வல்லவர்களாக உள்ளனர்.

குறிப்பாக சிவகார்த்திகேயன் குறித்து பேட்டி ஒன்றில் கூறிய விஜய்சேதுபதி, ‘சிவகார்த்திகேயனும் நானும் வெளியில் எங்கேயாவது சந்தித்தால் நல்லா பேசிக்குவோம். அன்பைப் பரிமாறிக்குவோம். அவருக்கு சினிமா பெரிய பிசினஸ். என்னைவிட வேகமா முன்னேறிக்கிட்டு இருக்கிற ஒரு மனிதர். எல்லா முன்னணி நடிகர்களையும் இதுவரை இதுபோல இணையாக பார்த்துக்கிட்டு இருந்த மக்களுக்கு இப்போதும் ஒரு இணை தேவைப்படுகிறது. தன்னால் உருவானதுதான் இந்த இணை என்பது. நாங்கள் உருவாக்கியது கிடையாது’’

எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித், தனுஷ் – சிம்பு இந்த வரிசையில் சிவகார்த்திகேயன் – விஜய்சேதுபதி என்ற புதிய இணை தமிழ் சினிமாவில் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *